ரஷ்யாவிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திக் குத்தில், 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியரொருவரும் 13 மாணவர்களுமே இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருவதாகவும் அந் நாட்டு  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகமூடி அணிந்த இருவர், பாடசாலை வளாகத்தினுள் இன்று  நுழைந்து மாணவர்கள் மீதும் ஆசிரியர் மீதும் கத்திக் குத்தை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இரண்டு மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலே கத்திக் குத்தில் முடிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரு மாணவர்களையும் கைதுசெய்துள்ளதோடு  சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும், பொலிஸார் தெரிவிக்கின்றனர்.