லிபியாவின் தலைநகரான திரிபோலியில் இன்று காலை ஆயுதக் குழுவினருக்கும் சிறப்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இம்மோதல் இடம்பெறும் பகுதியை அண்டி அமைந்துள்ள Mitiga  விமான நிலையமும், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதோடு அரசாங்க ஊழியர்கள் அலுவலகங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.