ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று இந்தோனேஷிய ஜனாதிபதி யோக்கோ விடோடோ  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

இந்தோனேஷிய ஜனாதிபதி எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.