இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் இரட்டைக் கோபுரங்களைக் கொண்டதும் பல மாடிகளைக் கொண்டதுமான பங்குப் பரிவர்த்தனை நிலையம் இயங்கிவரும் கட்டடம் சரிந்து வீழ்ந்ததில் சுமார் 28 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பங்குப் பரிவர்த்தனை நிலையம் இரண்டாவது மாடி இன்று திடீரென்று சரிந்து வீழ்ந்துள்ளது.   

இதன்போது கட்டடத்திலிருந்த சுமார் 28 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு  பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.