மன்னார்- மடு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பூமலர்ந்தாழ்வு ( 2ம் கட்டை ) கிராமத்துக்குள் சிறுத்தை புகுவதால் அச்சத்தில் அக்கிராம மக்கள் அச்சத்தில் வாழ்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பூமலர்ந்தாழ்வு கிராமத்துக்குள் இரவில் அடிக்கடி சிறுத்தை புகுந்து ஆடுகளை வேட்டையாடிவருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம்  பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், அது மட்டுமின்றி ஆடுகளை வேட்டை ஆட வரும் சிறுத்தைகள் எதிர் வரும் காலங்களில் எங்களை தாக்க முற்பட்டால் நாம் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.