ஹட்டன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பேடு ஒன்று 180 கிராம் நிறை கொண்ட பாரிய முட்டைகளை இட்ட அதிசய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

வழமையாக குறித்த கோழி  சுமார் 60 தொடக்கம் 70 கிராம் வரையான நிறை கொண்ட சாதாரண முட்டைகளை மாத்திரம் இட்டு வந்துள்ளதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரட்டை கோதுடைய பெரிய முட்டையொன்றினை இட்டுள்ளதாகவும் நேற்று சுமார் 180 கிராம் கொண்ட அதிசயத்தக்க பாரிய முட்டைகளை  இட்டுள்ளதாகவும் பண்ணை உரிமையாளர் தெரிவித்தார்.

மேலும் சாதாரணமாக பெட்டை கோழி ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை முட்டை இடுவதாகவும் ஆனால் இந்த கோழி இரண்டு தடவைகள் வித்தியாசமான முட்டைகளை இட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.