இஸ்ரேலிய பிரதமரின் இந்திய விஜயமும், மோடியின் விருந்துபசாரமும்....

Published By: Digital Desk 7

15 Jan, 2018 | 01:49 PM
image

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இந்தியா சென்றுள்ளார்.

130 வணிகப் பிரதிநிதிகள் மற்றும் மனைவி சாராவோடு 6 நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள இஸ்ரேலிய பிரதமரை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர், ஆக்ரா, அகதமாபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கும் விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவருடைய மனைவி சாரா ஆகியோருக்கு பிரதமர் மோடி நேற்று  இரவு  டெல்லியில் உள்ள பிரதமர் மாளிகையில் விருந்துபசாரம் வழங்கியுள்ளார்.

இவ் விஜயத்தின் போது பிரதமர் மோடியும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் இருநாட்டு வர்த்தக நடவடிக்கைக்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான  விடயங்களைப் பற்றி ஆலோசிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையில் 1,700 கோடி ரூபா பெறுமதியான பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற  ஜெருசலேம் விவகாரத்தில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐ.நா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்ரேலிய பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25