வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் இன்று அதிகாலை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை ஆலயத்திற்கு சென்ற ஆலய பிரதம குரு மற்றும்  பக்தர்களே ஆலயம் உடைக்கப்பட்டு திருடப்பட்டமையை அவதானித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

ஆலயத்தின் மேல் பகுதியினூடாக ஆலயத்திற்குள் நுழைந்த திருடர்கள் தேர் திருப்பணி உண்டியல் உட்பட மேலுமொரு உண்டியலையும் உடைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை ஆலயத்தின் அலுவலக அறையின் கதவு மற்றும் யன்னல் உடைக்கப்பட்டிருந்ததுடன் அலுவலகத்தினுள் புகுந்து பணத்தினையும் திருடர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.

அத்துடன் ஆலயத்தின் மற்றுமொரு அறையில் வைக்கப்பட்டிருந்த தேர் திருப்பணிக்கான பற்றுச்சீட்டுக்களை பையொன்றில் கட்டி ஆலயத்தின் பின்புறமாக கைவிட்டு சென்றுள்ளனர்.

 இத்திருட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.