தென்­னா­பி­ரிக்­காவின் செஞ்­சூ­ரியன் மைதா­னத்தில் நடை­பெற்­று­வரும் 2ஆ-வது டெஸ்ட் போட்­டியின் 2ஆ-ம் நாள் ஆட்­டத்தில் உணவு இடை­வே­ளைக்கு சற்று முன் தென்­னா­பி­ரிக்க அணி தனது முதல் இன்­னிங்ஸில் 335 ஓட்­டங்­களை எடுத்து அனைத்து விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸிற்காக  துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தடுமாறி வருகின்றது.

2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி 85 ஓட்டங்களுடனும் புஜார ஓட்டமெதனையும் பெறாதும் களத்திலுள்ளனர்.

தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள இந்­திய அணி அந்­நாட்டு அணி­யுடன் 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்­கேற்­கி­றது. இவ்­விரு அணி­களும் மோதும் இரண்­டா­வது டெஸ்ட், செஞ்­சூ­ரி­யனில் ஆரம்­ப­மா­னது.

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய தென்­னா­பி­ரிக்க அணிக்கு மார்க்ரம், எல்கர் ஜோடி நிதான துவக்கம் கொடுத்­தது. 

பும்ரா, முக­மது ஷமி, இஷாந்த் என, இந்­திய 'வேகங்­களை' சமா­ளித்து நின்ற இந்த ஜோடி, முதல் ஒரு மணிநேரத்தில் ஓட்­டங்கள் எடுக்க வேண்டும் என்­ப­தையே மறந்து விட்­டது. இதனால், முதலில் வீசப்­பட்ட 121 பந்­து­களில் (20.1 ஓவர், 42 ஓட்­டங்கள்), 102 பந்­து­களில் (17 ஓவர்கள்) ஓட்­டங்கள் எதுவும் எடுக்­காமல் வீண­டித்­தது.

இதன் பின் சற்று வேகம் காட்டத் துவங்­கினர். பும்ரா வீசிய ஓவரில் மூன்று பவுண்­டரிகள் அடித்தார் மார்க்ரம். தொடர்ந்து பாண்ட்யா ஓவரில் 2 பவுண்­ட­ரிகள் அடித்த இவர், டெஸ்ட் அரங்கில் 2ஆவது அரைச்­ச­தத்தை எட்­டினார். முதல் விக்­கெட்­டுக்கு 86 ஓட்­டங்­களை சேர்த்த நிலையில் அஷ்வின் 'சுழலில்', எல்கர் (31) சிக்­கினார்.

அடுத்து வந்த அம்லா, பும்ரா, அஷ்வின் பந்­து­களை எல்லைக் கோட்­டுக்கு விரட்­டினார். ஆடு­க­ளமும் துடுப்­பாட்­டத்­திற்கு சாத­க­மாக அமைய, தென்­னா­பி­ரிக்க அணியின் ஓட்ட எண்­ணிக்கை சீராக உயர்ந்­தது. இந்­நி­லையில், 94 ஓட்­டங்கள் எடுத்த மார்க்ரம் ஆட்­ட­மி­ழக்க, அதன்பின் வந்த டிவில்­லியர்ஸ், 20 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். மறு­புறம், அம்லா அரைச்­சதம் அடித்தார். இவர் 82 ஓட்­டங்கள் எடுத்த போது, ரன் அவுட்­டாக, போட்­டியில் திருப்­பு­முனை ஏற்­பட்­டது.

குயின்டன் டி கொக்கும் ஓட்­ட­மேதும் பெறாமல் ஆட்­ட­மி­ழந்தார். அடுத்து வந்த பிலாண்­டரும் ரன்­அவுட் முறையில் ஆட்­ட­மி­ழக்க, கடைசி ஒரு மணிநேரத்தில் 5 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுக்கள் சரிந்­தன. முதல் நாள் முடிவில், தென்­னா­பி­ரிக்க அணி முதல் இன்­னிங்ஸில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 269 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. 

இரண்­டா­வது நாளான நேற்று மேற்­கொண்டு 66 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் தென்னாபிரிக்கா 335 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் நேற்றைய 2 ஆம் நாள் நிறைவில் 61 ஓவர்கள் நிறைவில் 183 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.