பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நடனம் நெளிவு சுளி­வு­க­ளுடன் அமைந்­தாலும் நட­னத் தின் பின்­னணி மோச­மா­னது. மத்­திய வங்கி ஊழலை திசை ­தி­ருப்பும் நோக்­கமே இது  என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். 

 

ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுனவின் தேர்தல் பிர­சார கூட்டம் நேற்று பெல்­ம­துளை  பிர­தே­சத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில். 

இந்த அர­சாங்கம் பய­ணிக்கும் பாதை மிகவும் மோச­மா­னது, மக்­க­ளையும் கலா­சா­ரத்­தையும் அழிக்கும் நட­வ­டிக்­கை­க­ளையே படிப்­ப­டி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இவர்­களை விரைவில் வெளி­யேற்ற வேண்டும். அதில் எம்­மத்­தியில் எந்த மாற்றுக் கருத்­துக்கும் இட­மில்லை. இவர்கள் ஆட்­சியை கைப்­பற்ற பல்­வேறு பொய்­களை கூறியும் கட்டுக் கதை­களை உரு­வாக்­கியும் கூறினர். மக்­களை ஏமாற்­றியே இவர்கள் ஆட்­சியை கைப்­பற்­றினர். 

இதன் பின்­ன­ணியில் பாரிய சூழ்ச்சி நிகழ்ந்­துள்­ளது. பண்­டா­ர­நா­யக்­கவின் கொள்­கையும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கொள்­கையும் இன்று ஐக்­கிய தேசியக் கட்­சிக்­காக காவு­கொ­டுக்­கப்­பட்­டு­விட்­டன. நாம் இத்­தனை கால­மாக கட்­டிக்­காத்த ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தூய்­மை­யான கொள்கை இன்று முழு­மை­யாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­னா­லேயே அழிக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

கட்­சியில் இருந்து வெளி­யே­றிய சிலர் பண்­டா­ர­நா­யக்­கவின் கொள்­கையை ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கால­டியில் வைத்து பூஜை செய்ய தொடங்­கினர். அன்­றுதான் பண்­டா­ர­நா­யக்க இரண்­டா­வது தட­வை­யாகும் கொலை­செய்­யப்­பட்டர். 

இந்த அர­சாங்கம் வந்­த­வுடன் மத்­திய வங்­கியில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது. மக்­களின் பணம் அவர்­களின் உழைப்பு ஒரு­சி­லரால் அப­க­ரிக்­கப்­பட்­டது. இந்த நாட்டில் இடம்­பெற்ற மிகப்­பெ­ரிய ஊழல் இது­வாகும். இந்­நி­லையில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது. அதன் பின்னர் என்ன நடந்­தது என்று யாருக்கும் தெரி­யாது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டு மக்­களை ஏமாற்­றி­விட்டார். அறிக்கை வர முதல்­நாளே நட­ன­மா­டினார். வளைந்து நெளிந்து நட­ன­மா­டினார். மிகவும் அழ­காக அவ­ரது நடனம் அமைந்­தது. ஆனால் இந்த நட­னத்தின் பின்­னணி என்ன. அவர் ஆடிய நடனம் குறித்து மட்­டுமே நாங்கள் கதைத்­துக்­கொண்டு விமர்­சித்­துக்­கொண்டு உள்ளோம். ஆனால் மத்­திய வங்கி கள­வினை மூடி மறைத்து மக்­களை திசை­தி­ருப்­பவே ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவ்­வாறு நட­ன­மா­டினார். 

இவர்கள் அனை­வ­ருமே மக்­களை ஏமாற்றி மக்­களின் பணத்தில் கொள்­ளை­ய­டித்து வாழ்ந்து வரு­கின்­றனர். இந்த நாட்­டுக்கு சிறிதும் பொருந்­தாத ஒரு அர­சியல் கால­சாரம் இன்று உரு­வாக்­கப்­பட்டு வருகின்றது. ஒரு சிலர் தாம் தூய்மையான நாட்டினை உருவாக்கி வருவதாக கதை கூறி வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியோ மற்றுபுரம் மக்களின் சொத்துக்களை கொளையடித்து மத்திய வங்கியை தூய்மையாக தூசுபடாது சுத்தம்செய்து வைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.