மஹிந்தவின் ஊழலை அம்­ப­லப்­ப­டுத்தி தண்­டிப்போம் :சந்திரிக்கா

Published By: Priyatharshan

15 Jan, 2018 | 11:24 AM
image

ஜனா­தி­ப­தியோ பிர­த­மரோ எந்­த­வித ஊழ­லிலும் ஈடு­ப­டாத தலை­வர்கள்.  அர­சாங்­கத்தில் ஒரு­சில ஊழல்­வா­திகள் உள்­ளனர். அவர்­களை அப்­பு­றப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்கள் அர­சாங்­கத்­தினுள் இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்தார். 

மஹிந்த ராஜபக்ஷவின் ஊழ­லையும் விரைவில் அம்­ப­லப்­ப­டுத்தி தண்­டிப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 

வெயன்­கொட பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க இதனைக் குறிப்­பிட்டார்.  

அவர் மேலும் கூறு­கையில்,

இந்த அர­சாங்­கத்தில் ஜனா­தி­ப­தியோ அல்­லது பிர­த­மரோ ஊழலில் ஈடு­ப­டு­வ­தில்லை. பெரும்­பா­லான அமைச்­சர்­களும் ஊழலில் ஈடு­ப­டு­வ­தில்லை. எனினும் முன்­னைய ஆட்­சியின் ஊழல் குற்­றங்­களில் ஈடு­பட்ட சில நபர்­களும் இந்த அர­சாங்­கத்­திலும் உள்­ளனர். அவர்­களை படிப்­ப­டி­யாக அகற்றும் நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம் . கள்­ளர்­களை ஒரே தட­வையில்  தண்­டிக்­கவும் முடி­யாது. யாரையும் கொன்­று­வி­டவும் முடி­யாது. படிப்­ப­டி­யாக அர­சாங்­கத்தை சுத்­தப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.  விரைவில் இந்த அர­சாங்கம் தூய்­மை­யான அர­சாங்­க­மாக உருப்­பெறும். தூய்­மை­யான நாட்­டினை உரு­வாக்­கு­வ­திலும் ஊழல் வாதி­களை தண்­டிப்­ப­திலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரை­வான நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்றார். ஆகவே மக்கள் எதிர்­பார்க்கும் கேள்­வி­க­ளுக்­கான விடைகள் விரைவில் கிடைக்கும். 

 இன்று பொது எதி­ரணி என கூறிக்­கொண்டு தாம் தூய்­மை­யான அணி­யினர் என தெரி­விக்கும் நபர்கள் தொண்­டையில் இரத்தம் கசியும் அள­விற்கு மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் குறித்து கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் தவறு  இடம்­பெற்­றுள்­ளது.  அதனை நாங்கள் மறுக்­க­வில்லை. எனினும் இந்த குற்­றத்தில் சந்­தேகம் எழுந்­த­வு­ட­னேயே மத்­திய வங்­கியின் அப்­போ­தைய ஆளுநர் மற்றும் அப்­போ­தைய நிதி அமைச்சர் ஆகி­யோரை பத­வியில் இருந்து நீக்­கி­விட்டோம். அதேபோல் நீதி அமைச்­ச­ரையும் நீக்­கி­விட்டோம். மேலும் பலர் பத­வி­களில் இருந்து நீக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த விட­யங்கள் மக்­க­ளுக்கு தெரி­யாது. அத்­துடன் சுயா­தீ­ன­மாக விசா­ரணை நகர்­வு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டுவர். அதேபோல் கடந்த ஆட்சிக் காலத்தின் ஊழல்கள் குறித்து மறந்­து­வி­டவும் இல்லை. 

கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் மத்­திய வங்­கியில் இயன்ற அளவு கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட  அனைத்­தையும்  அம்­ப­லப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

 எயார் லங்கா விமா­ன­சே­வையை நாசப்­ப­டுத்­திய நபர்கள் இவர்கள். இவர்­களின் உறவினர்களை நிறுவனங்களின் தலைவர்களாக நியமித்து மக்களின் சொத்துக்களை முழுமையாக சூறையாடினர். இவ்வாறான நபர்களையே நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தோற்கடித்தோம். இதற்காகவே நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டோம். இதில் எந்தத் தவறும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55