மக்கள் மற்றும் மதகுருமார்கள் இணைந்து ஆர்ப்பாட்டம்!!!

Published By: Digital Desk 7

15 Jan, 2018 | 10:24 AM
image

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை களுகல பிரதேச பகுதியில் பொல்பிட்டிய, பல்லேவத்த, கொல்லேன, மொரஹேனகம, அம்மத்தாவ, வக்கம, வக்ஷபான ஆகிய கிராம மக்கள் மற்றும் மதகுருமார்கள்  இணைந்து இன்று காலை 8 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஐந்து கிராம சேவகர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய பல கிராமங்களுக்கு செல்லும் சுமார் 14 கிலோ மீற்றர் கொண்ட பிரதான வீதியான லக்ஷபான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் மக்கள் பல்வேறு  அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவ்வீதியின் குறைபாடு காரணமாக நாளுக்கு நாள் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதாகவும், இதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

“பொறுப்புவாய்ந்தவர்களே விழித்தெழுங்கள், மாணவர்களின் கல்வியை பாலாக்காதே” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை  தாங்கிக் கொண்டு, கோஷங்களை எழுப்பியவாறு சுமார் 200ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதிருப்பதற்காக கினிகத்தேனை பொலிஸாரினால் இடைக்கால தடை நீதி மன்றில் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11