இராஜாங்க அமைச்சர் ஸ்ரியானி விஜே விக்ரம பயணித்த வாகனம் இன்று காலை கடுகன்னாவை பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் காயங்களுக்குள்ளான அமைச்சர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் அமைச்சருக்கு தலைப்பகுதி மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரவிக்கின்றன.