பல்வேறு வகையான ஆயுதங்களுடன் கரந்தெனியவில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து வெளிநாட்டுத் துப்பாக்கிகள் - 2, உள்நாட்டுத் துப்பாக்கிகள் - 2, துப்பாக்கி ரவைகள் - 148, மற்றும் வேறு சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபரை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.