தென்னாபிரிக்க அணிக்கெதிரான இந்த டெஸ்ட் போட்டியில் கோஹ்லி ஓட்டமெதனையும் பெறவில்லையெனில் அடுத்த டெஸ்ட் போட்டிக்குத் தன்னைத்தானே நீக்கிக் கொள்வது சரியானதென இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சேவாக் மேலும் தெரிவிக்கையில்,

புவனேஷ்வர் குமாரை காரணமின்றி அணியிலிருந்து நீக்கிய இந்திய அணித்த தலைவர் விராட் கோஹ்லி இந்த டெஸ்ட் போட்டியில் ஓட்டங்களைப் பெற வேண்டும்.

அவ்வாறு கோஹ்லி ஓட்டங்களைப் பெறவில்லையெனில் அடுத்த டெஸ்ட் போட்டிக்குத் தன்னைத்தானே நீக்கிக் கொள்வது உசிதமானது.

ஷிகர் தவண் ஒரு போட்டியில் தோல்வியடைந்ததற்காகவும், காரணமில்லாமல் புவனேஷ்வர் குமாரையும் கோஹ்லி நீக்கியதைப் பார்க்கும் போது, செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் கோலி ஓட்டங்களைப் பெறவில்லையெனில் ஜோஹான்னஸ்பேர்க் டெஸ்ட் போட்டியில் தன்னைத்தானே நீக்கிக் கொள்ள வேண்டும்.

இஷாந்த் சர்மாவை வேறு எந்த பந்துவீச்சாளருக்கும் பதிலாகவும் இணைத்திருக்கலாம் புவனேஷ்வர் குமார் கேப்டவுனில் அபாரமாக விளையாடினார். அவரை உட்கார வைப்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒரு செயல் என சேவாக் மேலும் தெரிவித்தார்.