போட்டிகளின் பின்னர் இரண்டு நிமிடங்கள் மாத்திரமே குளிக்குமாறு இந்திய அணிவீரர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்கோது டெஸ்ட் தொடரில் பங்கேற்கு விளையாடி வருகின்றது.

இந்நிலையில் போட்டிகளுக்குப் பின்னர் இரண்டு நிமிடம் மாத்திரமே இந்தி வீரர்களைக் குளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் தலைநகரான கேப் டவுனில்  நீர் தீர்ந்துபோகும் நிலை உருவாகியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நீர் தீர்ந்துபோகலாம் என அண்மைய கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

கடந்த மூன்று வருடங்களாகப் பெய்த மிக குறைந்த மழை மற்றும் அதிகரித்துவரும் மக்கள் தொகையால் அதிகரித்துள்ள நீர் நுகர்வே இந்நெருக்கடிக்குக் காரணமென கண்டறியப்பட்டுள்ளது.

கடல் நீரை குடிநீராக்குவது, நிலத்தடி நீர் சேகரிப்பு திட்டங்கள், நீர் மறுசுழற்சி திட்டங்கள் போன்ற தீர்வுத் திட்டங்கள் மூலம் நீர்ப் பிரச்சனையை தீர்க்க தென்னாபிரிக்க அரசு வேகமாக செயல்பட்டு வருகின்றது.

நீரைப் பாதுகாக்க வேண்டும் என்றும், ஒரு நாளைக்கு 87 லீற்றர் நீருக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்றும் தென்னாபிரிக்கான் கேப்டவுன் நகரிலுள்ள 4 மில்லியன் மக்கள்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். காரை கழுவுவதற்கும், நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கும் தடை அங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தண்ணீர் தொடர்பான பிரச்சினைகள் கேப் டவுனில் மாத்திரமல்லாது, உலகளவில் கிட்டதட்ட 850 மில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.