இறக்குவாணை, கொஹம்பகந்த, லபுவெல்வத்த பிரதான வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் 69 வயதுடைய முதியவரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த முதியவர், கஹவத்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இது வரையில் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை இறக்குவாணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.