கம்பஹா - பட்டபொத பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.