அனைவரது வாழ்விலும் வளம், நலம், செழிப்பு, மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறேன் : ஜனாதிபதி

Published By: Priyatharshan

14 Jan, 2018 | 05:01 AM
image

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடப்படும் தைத்திருநாள் அனைவரது வாழ்க்கையிலும் வளம், நலம், செழிப்பு, மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லா நலன்களும் பொங்கச்செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தைத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

தைத்திருநாளைக் கொண்டாடும் மக்களுக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியட்டுள்ள வாழ்த்துக்குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பட்டுள்ளார்.

அவர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உலகவாழ் தமிழ் மக்களால் இயற்கைக்கு தமது நன்றியைப் பறைசாற்றும் வகையில் அனுஷ்டிக்கப்படும் தைத்திருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச்செய்தியை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மானிட சமூகத்தினை நாகரிகத்தை நோக்கிப் பயணிக்க வைப்பதில் உழவுத் தொழிலே முக்கிய காரணியாக அமைந்தது. 

நவீன கைத்தொழில் மயமாக்கத்தினதும் தொழில்நுட்ப வளர்ச்சியினதும் ஈர்ப்பினால் கிராமவாசிகள் விவசாயத்தைக் கைவிட்டு, நகரங்களை நோக்கி படையெடுக்கும் நிலையிலும் பண்டைய பாரம்பரியங்களுடன் கொண்டாடப்படும் இத்தகைய பண்டிகைகள் மனிதனின் கலாசாரம், பண்பாடு,மனிதநேயம், ஒற்றுமை, பகிர்ந்துண்ணல் மற்றும் உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் போன்ற விழுமியப்பண்புகளை சமூகத்தில் பேண உதவுவதுடன் அவற்றை எதிர்கால தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் வகையில் பாதுகாப்பதற்கும் வாய்ப்பாக அமைகின்றன.

அத்தோடு உழவுக்குப் பெருமை சேர்க்கும் தைத்திருநாளானது, உணவு உற்பத்தியைப் பெருக்கி, அதில் தன்னிறைவைப் பெறவேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சிக்கும் வலு சேர்ப்பதாகவே அமைகிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடப்படும் தைத்திருநாள் அனைவரது வாழ்க்கையிலும் வளம், நலம், செழிப்பு, மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லா நலன்களும் பொங்கச்செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தைத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிவைத்துள்ள  பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52