அவிசாவளை - கண்டி வீதியில், பிந்தெனிய பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டார். 

அவிசாவளை - கண்டி வீதியோரமாக பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வீதி வழியாகச் சென்ற தனியார் பேருந்து ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில், ஏழு வயதுச் சிறுமி ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்.

இதைக் கண்டு கொதிப்படைந்த மக்கள் பேருந்தின் மீதும் சாரதி-நடத்துனர் மீதும் தாக்குதல் நடத்தினர். எனினும் அங்கு வந்த பொலிஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

சிறுமியுடன் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணும் மற்றொரு சிறுமியும் கடும் காயங்களுடன் கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.