மகாராஷ்ட்ராவில், நாற்பது குழந்தைகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், முப்பத்து இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய எட்டுக் குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மானிலத் தலைநகர் மும்பைக்கு சுமார் 135 கிலோமீற்றர் தொலைவிலே, இன்று காலை 11.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கரையோரப் பாதுகாப்புப் படை, நீரிறங்கு விமானம், ஹெலிகொப்டர் என்பன இறக்கிவிடப்பட்டுள்ளன.