‘பேர’ வாவியைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அழகான கொழும்பு’ என்ற, தலைநகரை அழகாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாகவும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையிலும் நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த நடைபாதையைத் திறந்து வைக்கவுள்ளது.

பேர வாவியின் சுற்றுப் பாதையில், ‘லேக் ஹவுஸ்’ முதல் தாமரைக் கோபுரம் வரையிலான பகுதியே முதற்கட்டமாகத் திறந்துவைக்கப்படவுள்ளது.

இரண்டாவது கட்டமான வொக்ஸோல் வீதி முதல் தாமரைக் கோபுரம் வரையிலான நடைபாதை அமைக்கும் பணி விரைவில் ஆரம்பமாகும் என்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.