மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடளாவிய ரீதியில் மின் வினியோகத்தில் அவ்வப்போது தடை ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நீரேந்துப் பகுதிகளில் குறித்த காலப் பகுதியில் கடும் வறட்சி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுவதே இதற்குக் காரணம் என்றும் மின்சார சபை விளக்கமளித்துள்ளது.

“மின் தட்டுப்பாட்டைத் தடுக்க உதவியாக மின்சாரத்தை மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்” என, சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய சக்தித் துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சனா ஜயவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.