கொழும்பு, கொள்ளுப்பிட்டி காலி வீதியால் சென்று கொண்டிருந்த காரொன்று திடீரென  தீப்பிடித்து எரிந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

அலரிமாளிகைக்கு எதிர்ப்புறம் கொழும்பு நோக்கி பயணித்த காரொன்றே இவ்வாறு தீப்பிடித்ததாகவும் அதில் பயணித்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படதபோதும் கார் தீயினால் பலத்த தேசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.