நூற்றாண்டு கால மின் மின் ஒளி மர்மம் கழைந்தது!!!

Published By: Digital Desk 7

13 Jan, 2018 | 11:31 AM
image

அவுஸ்திரேலியாவில் உள்ள குவின்ஸ்லாந்தின் புற பகுதிகளில் பல காலமாக மக்களை அச்சுறுத்தி வந்த மர்ம ஒளி ஒன்றை பற்றி தெரிந்து கொள்வோம்.

அந்த மர்ம ஒளிகள்  கிட்ட தட்ட அந்த சுற்று புற கிராமங்களில் வசித்து வந்தவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் கண்ணில் தென்பட்ட மர்ம ஒளிகள் அவை . முதல் முதலில் பவுலியாவில் உள்ள மின் மின் ஹோட்டலில் இருந்து தான் இதை பார்த்ததாக சொன்னனார்கள் அதனால் மக்கள் மத்தியில் இது 'மின் மின்' ஒளிகள் என்று புகழ் பெற்றது. 

அந்த பகுதியில் இரவில் யாராவது தனியாக சென்றால் தொடுவானில் அந்த ஒளி எட்டி பார்க்குமாம்,தொலைவில் வெட்ட வெளி தொடுவானத்தில் அதை பார்த்தவர்கள் இங்கே என்ன அது ஒளி என்று அதை நோக்கி சென்று பார்த்தவர்களுக்கு அந்த ஒளி மாயமாய் மறைந்து போனது.

கால போக்கில் அந்த ஒளி மக்களை அமானுஷ்ய அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. மக்கள் தனியே செல்ல பயந்தார்கள். அந்த ஒளி தங்களை நீண்டகாலமாய் கண்காணிப்பதாக நம்பினார்கள் . 

ஏறக்குறைய 100 ஆண்டுகளாக மர்ம ஒளி மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. பலர் அந்த மர்ம  ஒளி தங்களை பின் தொடர்ந்ததாக நம்பினார்கள். அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒளி இடம் என்று குறிப்பிடப்படுகிறது என பெயர்ப்பலகையை வைத்திருந்தார்கள்.

உலகில் தீர்க்க படாத விடை தெரியாத பல மர்மங்களை போல தான் அவுஸ்திரேலியாவின் இந்த மின் மின் ஒளி மர்மமும் தீர்க்க படாத மர்மமாக இருந்தது.

ஆனால்  jack pettigrew எனும்  குவின்ஸ்லாந்தின் neuro scientist ஒருவர் மின் மின் ஒளி மர்மமம் தொடர்பாக ஆராயச்சியில் ஈடுபட்டு மர்மம் கழையச் செய்துள்ளார்.

பல பேர் சொல்லி கேட்டு இருந்த கதையை ஜாக் நேரில் சந்திக்க சித்தம் கொண்டு சம்பவ இடத்தில் நெடு நாட்களாக இருந்து ஆராய்ந்தார்.  

தனது ஆய்வில் தனது ஆய்வில் இச் செயற்பாடானது ஆவியின் செயற்பாடோ மந்திர மாயஜாலங்களோ இல்லை என உறுதியாக நம்பிய ஜாக் அது என்ன என்பதை விளக்க முடியாமல் திணறினார் .

மின் மின் ஒளி குறித்த ஆழ்ந்த ஆய்வு மனப்பான்மையில் இருந்த ஜாக் ஒரு பகல் வேளையில் அதன் ரகசியம் அவருக்கு பிடி பட்டது.

அந்த பகுதியில் இல்லாத மலை பகுதி ஒன்று ஒருமுறை தொலைவில் கண்ணுக்கு தெரிவதும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் மறைவதையும் அவதானித்தார் அதே போல கடல் பகுதியில் தொடுவானில் கடல் பரப்பில் படகுகள் காற்றில் வானில் மிதப்பது போன்ற காட்சியை அவதானித்தார்.

அதாவது morgana mirage எனும் இயற்கை நிகழ்வு தான் அதற்க்கு காரணம் என தனக்குள் கோட்பாட்டு ரீதியாக உறுதிப்படுத்திக்கொண்டு செயற்பாட்டு ரீதியாகவும் நிரூபித்து காட்ட ஆயத்தமானார்.

சமதள நிலம் தன்னை சுற்றி உள்ள காற்றை குளுமையாக வைத்து இருக்க அதை சுற்றி உள்ள சூடான காற்று வழியே ஒளி செல்லும் போது அது தடைகளை வளைந்து கடந்து நம் கண்களுக்கு தென்படுகிறது. அது அந்த பகுதி நிலங்களில் மட்டும் நடக்கும் சிறப்பு நிகழ்வு என கண்டார்.

இதை நிரூபிக்க  தனது காரை எடுத்து கொண்டு தொலைவில் கண்ணால் காண முடியாத ஓர் இடத்தில் நிறுத்தி அதன் ஹெட் லைட் மற்றும்  வண்ண விளக்குகளையும் அணைத்தும் இயக்கியும் மாறி மாறி தனது சோதனையை செய்து பார்த்துள்ளார்.

வெகு தூரத்தில் இந்த ஒளி அந்த மர்ம ஒளி போலவே காண கிடைந்ததது .ஜாக் கார் லைட்டை அணைத்தத்தும் அந்த ஒளிகளும் நின்று போயின.  நீண்ட தொலைவில் உள்ள நகரங்களின் ஒளி காற்றில் வளைந்து வந்து மர்ம ஒளியாக தெரிகிறது என அறிவித்தார்.

நூற்றாண்டு கால மர்மத்தை விளக்கி ஒரு முடிவிற்கு கொண்டு வந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right