இலங்ககை டெஸ்ட் அணியின் உப தலைவராக வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் கடமையாற்றுகின்றார்.

பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கே சுரங்க லக்மாலை உபதலைவராக இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு நியமித்துள்ளது.

தேர்வுக்குழுவின் நியமனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஒப்புதல் அளித்துள்ளதுடன் ஏற்கனவே பங்களாதேஷ் அணிக்கெதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ள சுரங்க லக்மால் உட்பட 16 வீரர்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இம் மாதம் 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி வரை பங்களாதேஷின் சிட்டகொங்கிலும் 2 போட்டி பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரை டாக்காவிலும் இடம்பெறவுள்ளது.

பங்காதேஷுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் வருமாறு,

தினேஷ் சந்திமால் - அணித் தலைவர்

திமுத்த கருணாரத்ன

அஞ்சலோ மெத்தியூஸ்

தனுஷ்க குணதிலக

குஷல் மென்டிஸ்

தனஞ்சய டி சில்வா

நிரோஷன் டிக்வெல்ல

ரோஷேன் சில்வா

ரங்கண ஹேரத்

சுரங்க லக்மால் - உப தலைவர்

டில்ருவான் பெரேரா 

துஷ்மந்த சாமிர

லக்ஷான் சந்தகன்

அகில தனஞ்சய

லகிரு கமகே

லகிரு குமார