இந்­திய- – தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதும் 2ஆ-வது டெஸ்ட் போட்டி செஞ்­சூ­ரியன் சுப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதா­னத்தில் இன்று தொடங்­கு­கி­றது. 

விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி தென்­னா­பி­ரிக்­காவில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது.

இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் கேப்­ட­வுனில் நடை­பெற்ற முதல் டெஸ்டில் தென்­னா­பி­ரிக்கா 72 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது.

இந்­நி­லையில் இந்­திய – தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதும் 2ஆ-வது

டெஸ்ட் போட்டி செஞ்­சூ­ரியன் சுப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதா­னத்தில் இன்று தொடங்­கு­கி­றது.

முதல் டெஸ்டில் ஏற்­பட்ட தோல்­விக்கு இந்­திய அணி பதி­லடி கொடுத்து தொடரை 1–-1 என்ற கணக்கில் சமன் செய்­யுமா என்று எதிர்பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனால் அது மிகவும் சவா­லா­னது.

தென்­னா­பி­ரிக்கா செஞ்­சூ­ரி­யனில் 2 டெஸ்ட்களில் மட்­டுமே தோல்­வி­யுற்­றி­ருக்­கிறது. மொத்தம் விளை­யா­டி­யுள்ள 22 போட்­டிகளில் 17இல் வெற்­றி­பெற்­றுள்­ளது. அத னால் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு இந்த மைதானம் ராசி­யான மைதானம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்தியா மீண்டெழுமா அல்லது தென்னாபிரிக்கா தொடரை வெல்லுமா என்று.