19 வய­திற்­குட்பட் டோருக்­கான ஐ.சி.சி.யின் இளையோர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இந்தத் தொடரில் கமிந்து மெண்டிஸ் தலை­மை­யி­லான இளம் இலங்கை பங்­கேற்­கி­றது.

இந்த நிலையில் 12ஆ-வது இளையோர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் திரு­விழா நியூ­ஸி­லாந்தில் இன்று ஆரம்­ப­மாகி எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 3ஆம் திக­தி­வரை நடை­பெ­று­கி­றது. 

இதில் பங்­கேற்கும் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­படி ‘ஏ’ பிரிவில் கென்யா, நியூ­ஸி­லாந்து, தென்­னா­பி­ரிக்கா, நடப்பு சம்­பியன் மேற்­கிந்­தி­யத்­தீ­வுகள் ஆகிய அணிகள் இடம்­பெற்­றுள்­ளன.

‘பி’ பிரிவில் இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா, பப்­புவா நியூ கினியா, சிம்­பாப்வே, ‘சி’ பிரிவில் பங்­க­ளாதேஷ், கனடா, இங்­கி­லாந்து, நமி­பியா, ‘டி’ பிரிவில் ஆப்­கா­னிஸ்தான், அயர்­லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்­றுள்­ளன. 

ஒவ்­வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணி­க­ளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்­வொரு பிரி­விலும் முதல் இரு இடங்­களை பிடிக்கும் அணிகள் காலி­று­திக்கு முன்­னேறும்.

தங்­களை அடுத்த கட்­டத்­துக்கு கொண்டு செல்­லவும், அபா­ர­மான ஆட்­டத்தின் மூலம் அனை­வரின் கவ­னத்தை ஈர்க்­கவும் இளம் வீரர்­க­ளுக்கு இந்த உலகக் கிண்ணம் பொன்­னான வாய்ப்­பாகும்.

ஒரு இளையோர் உலகக் கிண்­ணத்தில் அதிக ஓட்­டங்­களைக் குவித்­தவர் என்ற சிறப்பு இந்­தி­யாவின் ஷிகர் தவானின் (2004ஆ-ம் ஆண்டில் 505 ஓட்­டங் கள்) வசம் இருக்­கி­றது.

மொத்தம் 7 மைதா­னங்­களில் இந்த போட்டி நடத்­தப்­ப­டு­கி­றது. முதல் நாளில் 4 லீக் ஆட்­டங்கள் அரங்­கே­று­கின்­றன. ஆப்­கா­னிஸ்­தான்-–­பா­கிஸ்தான், பப்­புவா நியூ கினியா-  – சிம்­பாப்வே, பங்­க­ளாதேஷ் – -நமி­பியா, நியூ­ஸி­லாந்து –- மேற்­கிந்­தி­யத்­தீ­வுகள் ஆகிய அணிகள் மோது­கின்­றன. 

இலங்கை அணி தனது முதல் போட்­டியில் நாளை அயர்­லாந்தை எதிர்­கொள்­கி­றது. 

கமிந்து மெண்டிஸ் தலை­மை­யி­லான இலங்கை அணியும் பல­மான அணி­யா­கவே களத்தில் இறங்­கு­கின்­றது. இந்த உலகக் கிண்­ணத்­தில் சாதிக்கும் முனைப்போடு இலங்கை இருக்கின்றமை குறிப் பிடத்தக்கது.