நல்­லாட்சி அரசில் அதி­க­ரிக்கும் நெருக்­கடி

Published By: Priyatharshan

13 Jan, 2018 | 08:45 AM
image

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்­கு­மி­டை­யி­லான நெருக்­க­டிகள் தொடர்ந்து அதி­க­ரித்து செல்­கின்­றன. அதா­வது இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து அமைத்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குள் தற்­போ­தைய நிலை­மையில் பாரிய நெருக்­க­டிகள் அதி­க­ரித்­துள்­ளன. 

குறிப்­பாக மத்­திய வங்கி பிணை­முறி மோசடி குறித்த அறிக்கை வெ ளிவந்­துள்ள நிலையில் தற்­போது அது தொடர்பில் இரண்டு தரப்­பி­னரும் பகி­ரங்­க­மா­கவே முரண்­பட ஆரம்­பித்­துள்­ளனர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் 

அமைச்­சர்­களும் சுதந்­திரக் கட்­சியின் அமைச்­சர்­களும் பாரி­ய­ளவில் கடும் விமர்­ச­னங்­களை முன்­வ­வைத்து வரு­கின்­றனர். 

குறிப்­பாக நேற்­று­முன்­தினம் அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ ஜனா­தி­ப­தியை விமர்­சித்து பேசி­யி­ருந்தார். அதே­போன்று இரா­ஜாங்க அமைச்சர் சுஜீவ சேன­சிங்க ஜனா­தி­பதி மீது விமர்­ச­னங்­கைள முன்­வைத்­தி­ருந்தார். அதே­வேளை சுதந்­திரக் கட்­சியின் அமைச்­சர்­க­ளான சுசில் பிரே­ம­ஜ­யந்த மஹிந்த அம­ர­வீர மற்றும் இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஆகி­யோரும் ஐக்­கிய தேசியக் கட்­சியை கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்­தனர். இந் நிலை­யி­லேயே சுதந்­திரக் கட்சி நல்­லாட்­சி­யி­லி­ருந்து வில­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 

2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் ஆரம்­ப­மான நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்தின் பத­விக்­காலம் இவ் வருடம் செப்­டெம்பர் மாதத்­துடன் முடி­வ­டைந்­தது.  எனினும் அது தொடர்­பான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையை கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்­ப­தற்கு இரண்டு கட்­சி­களும் இணங்­கின. தற்­போது டிசம்பர் 31 ஆம் திக­தியும் கடந்­துள்ள நிலையில் தேர்தல் முடி­யும்­வரை புரிந்துணர்வு உடன்படிக்கையை நீடிப்பதற்கு இரண்டு கட்சிகளும் இணங்கின. எனினும் தற்போது இரண்டு கட்சிகளுக்குமிடையில் நெருக்கடி பாரியளவில் அதிகரித்து செல்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04