டெஸ்ட், இ20 மற்றும் முக்கோண ஒருநாள் போட்டிகள் அடங்கலான கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணி, நாளை (13) காலை பங்களாதேஷ் நோக்கிப் புறப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு விசேட பிரித் ஓதும் வைபவம் இன்று இலங்கை கிரிக்கெட் நிலையத்தில் நடைபெற்றது. இதில், போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.

முக்கோண ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் ஸிம்பாப்வே ஆகிய நாடுகளை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்தப் போட்டிகள், எதிர்வரும் 15ஆம் திகதி திங்களன்று ஆரம்பமாகின்றன. இறுதிப் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும்.

பங்களாதேஷ்-இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் எதிர்வரும் 31ஆம் மற்றும் பெப்ரவரி 8ஆம் திகதி ஆரம்பமாகும்.

பெப்ரவரி 15ஆம் 18ஆம் திகதிகளில் இவ்விரு அணிகளும் இ20 போட்டிகளில் விளையாடவுள்ளன.