குருணாகலையை அண்மித்த சில பகுதிகளில் சற்று முன் வீசிய கடும் காற்றினால் சிறு சிறு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

கிரியுல்ல, படல்கம, கொட்டதெனியாவ மற்றும் வல்பிட்ட ஆகிய பகுதிகளிலேயே மேற்படி காற்று வீசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இக்காற்றினால், வீட்டின் கூரைகள் சேதமுற்றிருப்பதாகவும் மேலும் பல பொருட்சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.