தைப்பொங்கல் பண்டிகை இம்முறை ஞாயிற்றுக்கிழமை வருவதை முன்னிட்டு, மறு தினம் திங்களன்று ஊவா மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தமிழர் பெருவாரியாக வாழும் ஏனைய பிராந்தியங்களில் வழமைபோல் பாடசாலைகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.