இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஜோசன் சியர்ஸ் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தனது கடமைகளை முடித்துக்கொண்டு அவுஸ்திரேலியா திரும்பவுள்ள நிலையிலேயே அவர் இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பில் ஈடுபட்டார்.

இச் சந்திப்பு பாதுகாப்பு படைகளின் பிரதானியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. 

இதன் போது புதிதாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தின்  பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கப்டன் சீன் உன்வினும் பிரசன்னமாகியிருந்தார்.

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக புதிதாக பொறுப்பேற்கவுள்ள குரூப் கப்டன் சீன் உன்வினை வரவேற்றதுடன் கடந்த காலமாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பதவிவகித்த கப்டன் ஜோசன் சீஸர்ஸுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

இதன்போது இருவரும் பரஸ்பரம் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.