மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேட்பாளருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதமாக விதித்து தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், குறித்த நபரின் வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை மூன்று மாத காலங்களுக்கு இரத்துச் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில், நொச்சியாகம பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளரான இவர், போதையில் இருக்கும்போது தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.