தினமும் ஆபாச  குறுந்தகவல்கள் அனுப்பி  தொந்தரவு செய்து வந்த  இளைஞனை பெண்ணொருவர் செருப்பால் அடிக்கும் காணொளி காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

இந்தியாவில், அலகாபாத்தில் இந்த சம்பம் நடைபெற்றுள்ளது.

மேலும் ,தன்னுடைய எண்ணில் இருந்து மட்டுமல்லாமல், பல்வேறு எண்களிலிருந்தும் அப்பெண்ணை அவர் தொடர்பு கொண்டு ஆபாச குறுந்தகவல்களையும் அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அப்பெண் சம்பவத்தன்று அந்த இளைஞனை ஒரு இடத்திற்கு வர வைத்து, அங்கு பலர் முன்னிலையில் செருப்பால் அடித்தார்.

இந்த சம்பவத்தை ஒருவர் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வேகமாக பரவி வருகிறது.