வீதி விபத்தில் பாடசாலை மாணவன் படுகாயம்!!!

Published By: Digital Desk 7

12 Jan, 2018 | 03:37 PM
image

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இன்று மதியம் 2 மணியளவில்  இடம் பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பாடசாலை மாணவன் ஒருவர் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  மேலதிக சிகிச்சைகளுக்காக  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளார்.

மாணவன்வீதியை கடக்க முயன்ற போது நுவரெலியாவிலிருந்து வந்த தனியார் சொகுசு வாகனத்தை முந்திக் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் சமர்செட் தோட்டத்தை  சேர்ந்த  தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும், 11 வயதான சுவிஷன்  என்ற மாணவனே படுகாயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பாடசாலை அருகே வீதியை கடக்க பாதசாரி கடவைகள் இன்மையினாலும் வேகத்தடைகள் போடப்படாமையினாலும் மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் இவ்விடயம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர சபைக்கு பல தடவைகள் அறிவித்துள்ள போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை மேற்கொள்ளவில்லை  எனவும் பாடசாலை நிர்வாகத்தினரும் அப் பகுதி மக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27