ஊடகவியலாளர் டன்ஸ்டன் மணியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான “இன்னும் பெயர் வைக்கல”  நூல் வெளியீட்டு விழா எதிர்வரும்  20 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

புதிய அலைகலை வட்டத்தின் ஸ்தாபகத் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இராதாமேதா தலைமையிலும் நூலாசிரியரின் பாட்டியான உலகம்மாள் மாரிமுத்து முன்னிலையிலும் இந்த நூல் வெளியீட்ட நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். 

இந் நிகழ்வில் கிடைக்கும் நிதி, பின்தங்கிய பாடசாலைகளுக்கு தண்ணீர் தாங்கி வழங்குவதற்காக அன்பளிப்பாக கொடுக்கப்படவுள்ளதாக விழா ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.