இனி வாடகைக் கார் சாரதிகளாக சவுதியில் பெண்கள்!!!!

Published By: Digital Desk 7

12 Jan, 2018 | 01:34 PM
image

சவுதி அரேபிய பெண்களுக்கு கார் ஓட்ட அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, வாடகைக் கார் நிறுவனங்கள் 10 ஆயிரம் பெண்களை வாடகைக் கார்  ஓட்டுநர்களாக பணியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

சவுதி அரேபியாவில் பெண்கள் உரிமைகள் இஸ்லாமியச்  சட்ட முறைமையில் இருந்தும், அரேபிய பண்பாட்டில் இருந்தும் வரையறை செய்யப்படுகின்றன. ஆண் ஆதிக்க வரலாற்றைக் கொண்ட சவுதி அரேபியாவில், ஆண் பெண் பிரிவினை, பெண்களின் கொளரவம் ஆகியவை முக்கியமானவை.

சவுதியில் உலகளவில் பெண்களுக்கு மிகக் குறைந்தளவிலான சுதந்திரங்களும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு பெண்கள் இத்தகைய  ஒடுக்குமுறைக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். ட்விட்டர்  மூலமும் இணையம் வாயிலாகவும் அவர்கள் தமது உரிமைகளுக்காக போராடிவருகிறார்கள்.

இந்நிலையில் சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் லொறி, பைக் ஓட்டவும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது. அதன் அடிப்படையில் எதிர் வரும் ஜூன் மாதம் முதல் பெண்கள் முறைப்படி உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதைத் தொடர்ந்து, அங்குள்ள வாடகைக் கார் நிறுவனங்கள் பெண் ஓட்டுநர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.  "உபெர்" மற்றும் துபாயை சேர்ந்த "கரீம்" ஆகிய வாடகைக் கார் நிறுவனங்கள் இந்த முயற்சியை துவங்கியுள்ளனர்.

இதற்காக 10,௦௦௦ பெண்களை பணியில் அமர்த்துவார்கள் என தெரிகிறது. மேலும் சவுதியை பொறுத்தவரையில் 80% பெண்களே வாடகைக் கார்களை அதிகம்  பயன்படுத்துவார்கள் என்பதால் இத் திட்டம் நிச்சயம் வெற்றி பெரும் என நம்பப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10