ஒற்றை குழந்தை நோய்க்குறிக்கான சிகிச்சை

Published By: Robert

12 Jan, 2018 | 01:05 PM
image

இன்றைய திகதியில் இளம் தலைமுறையினர் பலரும் உயர்ந்து கொண்டேபோகும் விலைவாசி, மாசடைந்து வரும் சுற்றுச்சூழல், பாதுகாப்பாற்ற சமூகம் போன்ற பல காரணங்களால் ஒரேயொரு குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்கின்றனர். 

ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி ஒரே பிள்ளை என்பதால், அவர்களுக்கு அதிகளவில் செல்லம் கொடுத்து வளர்ப்பர். அத்துடன் அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதையே குறிக்கோளாகவும் கொண்டிருப்பர்.

இது போன்ற குடும்பச் சூழலில் வளரும் பிள்ளைகள், வீட்டைவிட்டு வெளியில் தான் செல்லும் இடங்களிலும் இதையே எதிர்பார்க்கத் தொடங்குகிறார்கள். பாடசாலை, டிவுசன் வகுப்புகள் மற்றும் வீதியிலுள்ள குழந்தைகளுடன் விளையாடும் போதும் தங்களுக்கு எதிர்ப்பு இருக்கக்கூடாது என்றே கருதுகிறார்கள். ஏதேனும் சிறிய அளவில் எதிர்ப்பு தோன்றினாலும் அதனால் மனதளவில் பாரிய பாதிப்பு ஏற்பட்டு தனிமையை விரும்பத் தொடங்கிவிடுவர்.

இவ்வாறனவர்கள் பிற்பாடு சமூகத்துடன் இணக்கமாக பழகுவதிலும், பேச்சு வார்தைகளிலும் சுமூகமாக நடந்துகொள்ள அச்சப்படுகிறார்கள். பல தருணங்களில் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே தடுமாறுவார்கள். இவர்களைத்தான் ஒற்றைக் குழந்தை நோய்க்குறி என்று மனவியல் மருத்துவத்துறை குறிப்பிடுகிறது. அதே தருணத்தில் ஒரேயொரு பிள்ளையை பெற்றெடுக்கும் பெற்றோர்களையும் இந்த நோய்க்குறி தாக்குவதுண்டு. அதனால் யார் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு சிகிச்சையளித்து இதிலிருந்து மீட்டெடுப்பர்.

இவர்களுக்கான சிகிச்சை என்பது அன்பும், அரவணைப்பும் தான். இது போன்ற ஒற்றை குழந்தையைப் பெற்றிருக்கும் பெற்றோர்களுக்கு, சில அறிவுரைகளையும் வழங்குவர். அவர்களை வளர்த்தெடுக்கும் போதே அவர்கள் விரும்பியதையெல்லாம் வாங்கிக் கொடுக்க கூடாது. அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்க கூடாது. அதற்கு மாறாக அவர்களுக்கு உறவுகளின் வலிமையைப் பற்றி நடைமுறையில் பல விடயங்கள் உணரவைக்கவேண்டும். அதற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் இல்லங்களுக்கோ அல்லது அது போன்றவர்கள் ஒன்றுகூடுமிடங்களுக்கோ அழைத்துச் சென்று மற்றவர்களுடன் பழகவிடவேண்டும். அப்போது தான் அவர்களுக்கு மற்றவர்களை எதிர்கொள்வது குறித்த சிந்தனையும், அவர்களை அரவணைத்து செல்லவேண்டியதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வார்கள். 

இதுபோன்ற உளவியல் சிக்கல்கள் மேலைத் தேய நாடுகளில் தான் இருந்தது. தற்போது இது தெற்காசிய நாடுகளிலும் பரவி வருகிறது. அதனால் சக மனிதர்களிடம் அன்பு பாராட்டுவோம். இது போன்ற உளவியல் சிக்கல் இல்லாதவர்களை உருவாக்குவோம்.

டொக்டர் யமுனா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29