தெற்கில் சீனா ! வடக்கில் இந்தியா !

Published By: Priyatharshan

12 Jan, 2018 | 01:11 PM
image

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் 6.9 பில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது. 

கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த நிதி உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இது தொடர்பான உடன்படிக்கையில் இந்திய ஏற்றுமதி வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளர் டேவிட் றஸ்குன்கா மற்றும் நிதியமைச்சின் திறைசேரியின் செயலாளர் கலாநிதி சமரதுங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்த நிதியுதவியின் கீழ் காங்கேசன்துறை துறைமுகம் முழு வசிதிகளை கொண்ட வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதன்மூலம் இந்த துறைமுகம் பிராந்தியத்தின் முக்கிய கடல் எல்லையின் கேந்திர நிலையமாக திகழும். மேலும் வடக்கில் புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் மூலம் வடக்கில் வர்த்தக ரீதியில் அமையக்கூடிய ஒரு துறைமுகமாக காங்கேசன்துறை துறைமுகம் அமைவதுடன்  இந்துசமுத்திர பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தெற்கில் சீன அரசாங்கத்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மையப்படுத்திய சீன பொருளாதார விஸ்தரிப்புக் கொள்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47