ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்குபற்றதன் மூலம் உலகமெங்கும் பிரபலமானவர் கள போராளி ஜுலி. இதனைத் தொடர்ந்து இவர் தனியார் தொலைகாட்சி நடத்திய ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். அதற்கு பின்னர் தொலைகாட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் பணியாற்றினார். தற்போது இவர் கதையின் நாயகியாக திரையுலகில் அறிமுகமாகிறார்.

இவர் நடிக்கும் படத்திற்கு உத்தமி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது குறித்து அவரிடம் கேட்ட போது,‘ நான் விரைவில் வெளியாகவிருக்கும் மன்னர் வகையறா என்ற படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறேன். தற்போது கதையின் நாயகியாக உத்தமி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறேன். இதில் எமக்கு ஜோடியாக பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடிக்கிறார்.’ என்றார்.

உத்தமி என்ற பெயரில் 1985 ஆம் ஆண்டில் நடிகை சுஜாதா, ராஜேஷ் நடிப்பில் ஒரு படம் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்