நல்லொழுக்கமுள்ள மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்யுங்கள் : ஜனாதிபதி

Published By: Priyatharshan

12 Jan, 2018 | 12:31 PM
image

நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு நல்லொழுக்கமுள்ள மக்கள் பிரதிநிதிகளை இம்முறை தேர்தலில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஹிங்குராங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தில் உள்ள தவறுகளை சரி செய்யும் ஊழல் மோசடியற்ற மக்கள் சார்பு பயணத்தின் ஆரம்ப அடியாக இத்தேர்தலில் மக்கள் மிகுந்த பொறுப்புடன் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும்.

தேசிய அரசியல் தலைவர்களினது பயணத்தின் ஆரம்பம் என்ற வகையில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நல்லொழுக்கமுள்ள பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.

உள்ளூராட்சி நிறுவனங்களில் நேர்மையான மக்கள் சார்பு பிரதிநிதிகளை உருவாக்குவதன் மூலம் முழு அரசியல் கலாசாரத்தையும் சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும். 

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரதிநிதிகள் தவறிழைக்க இடமளிக்கப்போவதில்லை. அந்த பொறுப்பை கட்சியின் தலைவர் என்ற வகையில் நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

 

இந்நிலையில், மொரகஸ்வெவ, உள்பத்வெவ, கிரித்தலே, உள்கட்டுபொத, ஹத்ஹம்பத்துவ, சிறிகெத்த, ஹிங்குராங்கொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இந்த சந்திப்பின்போது இணைந்துகொண்டனர்.

பிரதேசத்தில் உள்ள மகா சங்கத்தினர் மற்றும் சமயத் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் பெருமளவான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59