அக்கரைப்பற்று நாவற்குடா பிரதேசத்தில் இறந்த நிலையில் ஆண் சிசுவின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

காணியொன்றுக்குள் இருந்து குறித்த சிசுவின் சடலம் நேற்று இரவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

வேறொரு பிரதேசத்திலிருந்து இனம் தெரியாதவர்களால் சிசுவின் சடலத்தை குறித்த பகுதியில் கொண்டு வந்து போட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. 

சிசுவின் தலையின் பின்புறத்தில் காயம் ஒன்றும் காணப்படுகிறது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிசுவின் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.