நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா (79) இன்று அதிகாலையில் அவரது வீட்டில் மரணம் அடைந்தார். 

நுரையீரல் அழற்சி நோயால் மரணம் அடைந்த கொய்ராலாவின் உடல் காத்மாண்டு நகரில் உள்ள நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா நேபாள அரசியலில் 1954ம் ஆண்டு கால்பதித்தார். 

2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் திகதி பிரதமராக தேர்வுசெய்யப்பட்ட கொய்ராலா 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நேபாள நாட்டு பிரதமராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.