டயலொக் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்­தாட்டத் தொடரின் 2017ஆம் ஆண்­டுக்­கான கிண்­ணத்தை வெல்லப் போவது யார் என்­பதைத் தீர்­மா­னிக்கும் இறுதிப் போட்டி எதிர்­வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடை­பெ­ற­வுள்­ளது.

கொழும்பு குதி­ரைப்­பந்­தயத் திடல் மைதா­னத்தில் மாலை 6.30 மணிக்கு நடை­பெ­ற­வுள்ள இறுதிப் போட்­டியில் ஒரு போட்­டியில் கூட தோல்வி பெறாத றினோன் அணியும் ஒரே ஒரு போட்­டியில் தோல்­வி­கண்ட கொலம்போ எவ்.சி. அணியும் பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன.

இந்தப் போட்­டியில் வெற்­றி­பெறும் அணி 2017ஆம் ஆண்­டுக்­கான டயலொக் லீக் தொடரின் சம்­பி­ய­னாக முடி­சூ­டப்படும். 

17 சுற்­று­க­ளாக நடை­பெற்ற இந்தத் தொடரில் மொத்தம் 145 போட்­டிகள் நடை­பெற்­றுள்­ளன. இந்த 146 போட்­டி­க­ளிலும் முத­லி­ரண்டு இடங்களை பிடித்த அணி­க­ளான றினோனும், கொலம்போ எவ்.சி.யுமே இறுதிப் போட்­டியில் மோது­கின்­றன.

இவ் வருட டயலொக் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்­தாட்டப் போட்­டியில் 18 கழ­கங்கள் பங்­கு­பற்­றி­ய­துடன் லீக் சுற்று முடிவில் கடைசி நான்கு கழ­கங்கள் முதலாம் பிரி­வுக்கு தர­மி­றக்­கப்­ப­ட­வுள்­ளன. 

முதலாம் பிரிவில் இவ் வருடம் முத­லி­ரண்டு இடங்­களைப் பெறும் அணிகள் டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாட தரமுயர்த்தப்படும்.