தேர்தல் அறி­விக்­கப்­பட்டு   30 நாட்கள் நிறை­வ­டையும் நிலையில் இது­வ­ரையில் தேர்தல் வன்­முறைச் சம்­ப­வங்கள்  தொடர்­பான  243 முறைப்­பா­டுகள் கிடை க்­கப்­பெற்­றுள்­ளன.  மேலும் 287 தேர்தல் சட்­ட­மீறல் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. எனவே கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக சுயா­தீன தேர்­த­லுக்­கான  பெப்ரல் அமைப்பு தெரி­வித்­துள்­ளது. 

அவற்றுள் 28 முறைப்­பா­டு­களே  பாரதூரமானதாக அமைந்­துள்­ளன. இதே­போன்று 37 முறைப்­பா­டுகள் சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­க­ளா­கவும் 4 முறைப்­பா­டுகள் வைத்­தி­ய­சா­லை­யுடன் தொடர்­பு­டை­ய­தா­கவும் அமைந்­துள்­ளன என்று   பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்தார். 

Image result for பெப்ரல்

கொழும்பு சன சமூக கேந்­திர நிலை­யத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப் பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். 

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில் , 

இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு பின்னர் பல கார­ணங்­க­ளுக்­காக பிற்­போ­டப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் இம்­முறை இடம்­பெ­ற­வுள்­ளது. உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் நாடு பூரா­கவும் ஒரே நேரத்தில் இடம்­பெ­ற­வுள்­ளமை விஷேட அம்­ச­மாகும். இவ்­வி­ட­யத்தில் தேர்தல் ஆணைக்­குழு மிக அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­கின்­றது.

 சுதந்­தி­ர­மான தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு தடங்­கல்கள் ஏற்­ப­டலாம். இதனை தவிர்ப்­ப­தற்­காக தேர்தல் அவ­தா­னிப்பு பணி­களை பெப்ரல் அமைப்பு மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது. அதே­போன்று தேர்­தலுக்கு  முந்­திய காலம் தொடக்கம் முடி­வ­டையும் வரை தனது அவ­தா­னிப்பு பணி­களை மேற்­கொள்ள தயா­ரா­க­வுள்­ளது. இம்­முறை தேர்­தலை முன்­னிட்டு தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்கள் 7000 பேரை சேவையில் ஈடு­ப­டுத்­த­வுள்­ளனர்.

342 உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­க­ளுக்­கான தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் விசே­ட­மாக தேர்­த­லுக்கு முந்­திய காலப்­ப­கு­தியில் ஊட­க­வி­ய­லா­ளர்கள், சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் போன்ற அனு­பவம் வாய்ந்த அவ­தா­னிப்­ப­ாளர்­க­ளி­னூ­டாக   160 பேர்  பணியில் ஈடுப­டுத்தப்­பட்­டுள்­ளனர். அவ­ர­்க­ளுக்­கான விசேட பயிற்சி பணி­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன . 

இம்­முறை தேர்தல் காலங்­களில் வேட்­பா­ளர்கள் அரச ஊழி­யர்­களை தமது அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக  பயன்­ப­டுத்­து­வ­தாக முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்ளன.  இது­தொ­டர்­பாக நட­வ­டி­க­்கைகள் எடுக்­கப்­படும்.

தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக அரச சொத்­துக்­களை பயன்­ப­டுத்­து­த­லுடன் தொடர்­பு­டைய முறைப்­பா­டுகள் 29 கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அவற்றில் 23 முறைப்­பா­டுகள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சட்­ட­வி­ரே­த­மான பிர­சாரம் மற்றும் அர­சியல் பிர­யோகம் போன்­ற­னவே பிர­தான முறைப்­பா­டு­க­ளாக உள்­ளன. அதே­போன்று இவ்­வா­றான தேர்தல் சட்ட விரோத செய­ற்­பா­டு­களை குறைப்­ப­தற்­காக தேர்தல் ஆணைக்­குழு மற்றும் பொலிஸார் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளனர். இதன் மூலம் கட்டவுட் வைத்தல் , போஸ்­டர்கள் ஒட்­டுதல் போன்ற பிர­சார செயற்­பா­டு­களை மட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய தன்மையினை இம்முறை தேர்தலில் காணக்கூடியதாகவுள்ளது.

தேர்தல் காலங்களில் மக்களுக்கு பொருட்களை இலவசமாக வழங்கும் நடவடிக்கைகள் தடைசெய்யப் பட்டுள்ளன. அவ்வாறு வழங்கப்படும் பொருட்களை  அரச அதிகாரிகளே  பெற்றுத்தர வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறு வழங் கப்படும் பொருட்கள் அரசியல்வாதிகளின் பெயரில் விநியோகிப்பது சட்டவிரோத  செயற்பாடுகளாகும் என்றார்.