"தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை விட்டுக் கொடுக்­க­மாட்டோம்"

Published By: Robert

12 Jan, 2018 | 09:50 AM
image

ஒற்­றை­யாட்சி என்­பதே ஏக்­கிய இராஜ்ய ஆகும். இந்­நி­லையில்  ஒற்­றை­யாட்­சியை ஏற்றுக் கொண்­டி­ருப்­ப­தாக கூறும் தமிழ்­த்தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கைக்­காக வக்­கா­லத்து வாங்­கு­ப­வ­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன், 

Image result for எம்.ஏ.சுமந்­திரன்

தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை விட்டுக் கொடுக்­க­மாட்டோம் என கூறு­வது மிக மிக நகைப்­புக்­கு­ரி­யது என சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

சம­கால அர­சியல் நில­மைகள் குறித்து நேற்­றைய தினம் யாழ்.ஊடக அமை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கும்­போதே ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்­சியின் தலைவர் சுரேஸ் பிறே­மச்­சந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். 

மேலும் அவர் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

யாழ்.மாவட்­டத்தில் பல இடங்­களில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு உள்­ளு­ராட்சி சபை தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர்கள் அறி­முக கூட்­டங்­களை நடாத்­தி­யுள்­ளது. இதன்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஏக்­கிய இராஜ்ய என்­ப­தற்கு இணங்­கி­யுள்­ளது. ஆனால் தமிழ் மக்­களின் நீண்­ட­கால அபி­லா­ஷை­களை விட்டு கொடுக்­க­போ­வ­தில்லை என கூறி­யுள்ளார். அத­னு­டைய உண்­மை­யான அர்த்தம் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு ஒற்­றை­யாட்­சிக்கு இணங்­கி­யுள்­ளது என்­ப­தே­யாகும்.

ஏக்­கிய இராஜ்ய என்­பது ஒரு­மித்த நாடு என சுமந்­திரன் கூறி­னாலும், உண்­மையில் அது ஒற்­றை­யாட்­சி­யே­யாகும். அதனை சிங்­கள தலை­வர்கள் குறிப்­பாக ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகியோர் தங்­க­ளு­டைய மக்­க­ளுக்கு கூறு­கி­றார்கள். ஒற்­றை­யாட்­சியை தவிர ஒன்றும் கொடுக்­க­வில்லை என ஆனால் சுமந்­திரன் போன்ற தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் தாம் சார்ந்த மக்­க­ளுக்கு மிக கேவ­ல­மான பொய்யை சொல்­கி­றார்கள். இத­னை­விட மோச­மான செயல் ஒற்­றை­யாட்­சிக்கு இணங்­கிய பின்னர் தமிழ் மக்­களின் நீண்­ட­கால அபிi­லா­ஷை­களை வென்­றெ­டுப்போம் என்று கூறு­வ­தே­யாகும். 

இதனை  மக்­களை மடை­யர்­க­ளாக்கும் கருத்­தா­கவே நான் பார்க்­கிறேன். ஆக மொத்­தத்தில் ஒற்­றை­யாட்­சிக்கு இணங்­கி­விட்­டார்கள், வட­கி­ழக்கு இணைப்பை நிரா­க­ரித்­து­விட்­டார்கள், பௌத்­தத்­திற்கு முன்­னு­ரிமை என்­ப­தற்கும் இணங்­கி­விட்­டார்கள் இதற்கு பின்னர் இடைக்­கால அறிக்­கைக்கு வக்­கா­ளத்து வாங்கும் சுமந்­திரன் கூறு­வ­துபோல், தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை பெற­வது எப்­படி என்­பது எனக்கு தெரிய வில்லை.

இலங்கை கணக்­காளர் தரம் 3 பரீட்சை நிறுத்­தப்­பட்­டமை தொடர்­பாக.

இலங்கை கணக்­காளர் சேவை தரம் 3 ற்கான ஆட்­சேர்ப்பு விண்­ணப்பம் கடந்த 2016ம் ஆண்டு கோரப்­பட்டு 2017ம் ஆண்டு அதற்­கான பரீட்­சைகள் நடை­பெற்­றன. இதன் ஊடாக தமக்கு வேலைகள் கிடைக்கும் என சுமார் 75ற்கும் மேற்­பட்ட இளைஞர் யுவ­திகள் எதிர்­பார்த்­தி­ருந்த நிலையில் எந்த கார­ணமும் கூறப்­ப­டாமல் அந்த பரீட்சை முடி­வகள் இரத்து செய்­யப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன், திடீ­ரென மீள்­ப­ரீட்சை ஒன்று அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இதற்­கான காரணம் ஏற்­க­னவே நடை­பெற்ற பரீட்­சையில் அதிக படி­யான தமிழ் இளைஞர், யுவ­திகள் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்­த­மை­யே­யாகும். இவ்­வாறு சட்­டக்­கல்­லூரி தேர்­விலும் அதி­க­ப­டி­யான தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவ­திகள் தேர்­வான நிலையில் பிக்­குகள் அதற்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யி­ருந்­தார்கள். எனவே இந்த பரீட்சை முடி­வுகள் இரத்து செய்­யப்­பட்டு மீள் பரீட்சை நடத்­தப்­ப­டு­கின்­றமை தமிழ் இளைஞர், யுவ­திகள் அதிக இடங்­களில் சித்தி பெற்­றமை காரணம் என்றால் இது ஒரு இன­வாத செயற்­பா­டாகும்.

இது தொடர்­பாக தமிழ் மக்­களின் வாக்­கு­களால் பாரா­ளு­மன்றம் சென்­ற­வர்கள் ஒரு வார்த்தை கூட பேச­வில்லை. இனி­மே­லா­வது இது தொடர்­பாக பேசி தமிழ் இளைஞர், யுவ­தி­க­ளுக்­கான வேலை­வாய்ப்பை பெற்று கொடுக்­க­வேண்டும். என்­ப­துடன் பரீட்சை முடி­வுகள் எதற்­காக இரத்து செய்­யப்­பட்­டன என்­ப­தையும் அறிந்து வெளிப்­ப­டுத்­த­வேண்டும்  

முல்­லைத்­தீவு- வட்­டு­வாகல் காணி சுவீ­க­ரிப்பு  

முல்­லைத்­தீவு வட்­டு­வாகல் பகு­தியில் தமிழ் மக்­க­ளுக்கு சொந்­த­மான சுமார் 640 ஏக்கர் காணி கட்­ப­டை­யினால் சுவீ­க­ரிக்­கப்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. பல தட­வைகள் பொது­மக்கள் தங்கள் காணி­களை சுவீ­க­ரிக்க விடாது தொடர்ச்­சி­யாக அழுத்­தங்­களை கொடுத்­தார்கள்.

எனினும் தொடர்ச்­சி­யாக அந்த காணியை சுவீ­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்கைள் எடுக்­கப்­பட்டு கொண்­டி­ருக்­கின்­றன. இது சகித்து கொள்ள இய­லாத விட­ய­மாகும். வட­மா­கா­ணத்தில் கடற்­படை முகாம்கள் சந்­திக்கு சந்தி இருக்கும் நிலையில், புதி­தாக மக்­க­ளு­டைய காணி­களை அப­க­ரித்து அமைக்­க­வேண்­டிய தேவை உள்­ளதா? தமிழ் மக்­க­ளுக்கு எல்லாம் செய்வோம் என கூறும் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பும், அதன் தலை­வரும் இது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் 

தமிழ்­தே­சிய விடு­தலை கூட்­ட­மைப்பு என்ற பெயர்  

தமிழ்­தே­சிய விடு­தலை கூட்­ட­மைப்பு என்ற பெயரை பயன்­ப­டுத்த முடி­யாது  என தேர்­தல்கள் ஆணை­யாளர் கூறி­யுள்­ள­தாக அறி­கிறோம். ஆனால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எமக்கு ஒரு அறி­வித்­தலும் வழங்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் ஒரு ஊடகம் அந்த செய்­தியை பிர­சு­ரித்­தி­ருக்­கின்­றது.

 தமி­ழ­ரசுக் கட்­சியின் செய­லாளர் தேர்தல் ஆணை­ய­கத்­திற்கு கடிதம் ஒன்றை எழு­தி­யுள்­ள­தா­கவும், அதில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு என்ற பெயரில் தாங்­களும், புளொட் மற்றும் ரெலோ ஆகிய கட்­சிகள் செயற்­பட்டு கொண்­டி­ருக்கும் நிலையில் தமிழ்­தே­சிய விடு­தலை கூட்­ட­மைப்பு என்னும் பெயர் தமக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறியுள்ளதாக அறிகிறோம்.

உண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படாத ஒரு கட்சியாகும். எங்களுடைய தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பும் பதிவு செய்யப்படவில்லை. ஆகவே அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமானால் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழரசு கட்சியை திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே அது அமையும். எனவே எமக்கு இதுவரை உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டால் அது தொடர்பாக சட்டரீதியாக பேசுவதற்க்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். வேட்பாளர்கள் இது தொடர்பாக அலட்டி கொள்ளதேவையில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09