மதுபான விற்பனை நிலையங்களில் மது விற்பனைசெய்யும் நேரம் இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில்,  இரவு 10 மணி வரை மதுபான விற்பனை நிலையங்களை திறந்து வைத்திருக்க முடியும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று கையொப்பமிட்டார்.

உள்நாட்டு மதுபானங்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையங்களை வியாபார நடவடிக்கைக்காக திறந்து வைக்கும் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.