கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஓரினத்திருமணத்தை சட்டபூர்வமாக்கினர்.

ஓரினத்திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் அவுஸ்திரேலியா 25ஆவது நாடாகும்.

ஓரினத்திருமணத்தை சட்டபூர்வமாக்கியதன் பின்னர் முதன் முதலில் க்ரேக் பேர்ன்ஸ் மற்றும் லுக் சிலுவான் ஆகிய இரு மெய்வல்லுனர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களில் சமூக வலைத்தளங்களில் குறித்த இருவரினதும் திருமண புகைப் படங்கள் வைரலாக பரவியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ஓரினத்திருமணத்தை சட்டபூர்வமாக்கியதன் பின்னர் எதிர்பார்த்திராத அளவில் ஓரினத்திருமணம் நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.