சிங்கப்பூர் நாட்டவரைத் தாக்கிய சீனரை சிலாபம் பொலிஸார் கைது செய்தனர். சிலாபம், அம்பகடவில பகுதியில் நேற்று (10) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஈக்ரியன் ஸூ என்பவர் அம்பகடவில பகுதியில் கடல் அட்டைப் பண்ணையை நடத்தி வருகிறார். அவரிடம், ஸூ லிக்காய் (57) என்ற சீனர் பணியாற்றி வருகிறார்.

இன்னிலையில், நேற்று மாலை இருவருக்கிடையேயும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் கடுமையாகத் தாக்கப்பட்ட ஈக்ரியன் ஸு சிலாபம் பொலிஸில் முறைப்பாடளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், ஸூ லிக்காயையைக் கைது செய்தனர்.